செப்டம்பர் 11’ம் தேதி அமெரிக்க சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்ட தேதி. நியூயார்க் நகர இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு எரிந்து நொறுங்கி வீழ்ந்தது. ஏன். ராணுவ கேந்திரமான பென்டகன் கட்டடமும் தாக்கப்பட்டது.
2001 செப்டம்பர் 12 அன்று நடந்த உண்மைச் சம்பவம் ஒன்று சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது. அதை இங்கு தருகிறேன்.
· *
ஒரு வகையான புற்று நோய்ப் பிணியாளர்களுக்குப் புதிதாக BONE MARROW செலுத்தப்பட்டால் அவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு. ரத்த தானம் மாதிரி. இதுவும் ஒரு தானம் தான், என்றாலும் தானம் செய்பவரை சில நாட்களுக்கு முன்னதாகத் தயார் செய்ய வேண்டும். அவருக்கு மருந்து, மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும் தரப்பட வேண்டும். இந்த மருந்துகள் மிகுந்த வலியை ஏற்படுத்துமாம்.;
ஒரு நோயாளிக்கு BONE MARROW தேவை என்று கேள்விப்பட்ட ஒருவர் தானம் கொடுக்க முன்வந்தார். (அவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல; புற்றுநோய் மருத்துவரும் கூட. மேலும் அவர் ஒரு இந்தியர்..) தானம் BONE MARROW செய்வதற்கு முன் போடப்படவேண்டிய மருந்துகளைக் கொடுத்தார்கள்.. செப்டம்பர் 11’ம் தேதி காலையில் அவரிடமிருந்து தேவையான அளவு BONE MARROW எடுத்தார்கள், நார்த் கரோலினா மருத்துவமனை டாக்டர்கள். அதை நோயாளி உள்ள மருத்துவமனைக்கு மறு நாள் அனுப்ப வேண்டும்.










